போளூரில் பாஜக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவர் என்.ரமேஷ் தலைமை வகித்தார். நகரப் பொருளாளர் எம்.வெங்கடேசன், நகர துணைத் தலைவர் கனகவேல், நகரச் செயலர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணிச் செயலர் சீனு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட பொதுச் செயலர் ஏ.கே.சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு ஒவ்வோர் வாக்குச் சாவடிக்கு உள்பட்ட பகுதியிலும்
200 புதிய உறுப்பினர்களை சேர்த்து, பாஜகவை பலம் வாய்ந்த கட்சியாக மாற்ற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றனர்.
கூட்டத்தில், வர்த்தகப் பிரிவு மாவட்டச் செயலர்
ஆர்.கோபிநாத் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நகரச் செயலர் ராஜா நன்றி கூறினார்.