திருவண்ணாமலை

வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு

4th Jul 2019 09:31 AM

ADVERTISEMENT

சேத்துப்பட்டு அருகேயுள்ள வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
 ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, சேத்துப்பட்டை அடுத்துள்ள வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை கோபால விநாயகர், அங்காளம்மன், முத்து மாரியம்மன், பெரியாழி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் ஆலய வளாகத்தில் வீதி உலா வந்தார்.
 அதனைத் தொடர்ந்து இரவு ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
 பெண் பக்தர்கள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
 மேலும், இன்னிசை நிகழ்ச்சி, வாணவேடிக்கை நடைபெற்றது.
 திருவண்ணாமலை, வேலூர், சேலம், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
 விழா ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT