திருவண்ணாமலை

மாணவர் விடுதிக் காப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

4th Jul 2019 09:36 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளின் கீழ் இயங்கும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் விடுதிக் காப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் க.வ.பரிமளா தலைமை வகித்தார். பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் ஆர்.ரங்கநாயகி முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஏ.என்.லாவண்யா வரவேற்றார்.
 மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 2018-19 ஆம் ஆண்டில் 10, 11, 12-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற விடுதி மாணவ, மாணவிகளின் விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
 மேலும், 2019-20 ஆம் ஆண்டில் மாணவ-மாணவிகளின் வாசிப்புத்திறன் மற்றும் மாணவர்களிடையே கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
 கூட்டத்தில், தனி வட்டாட்சியர்கள் பி.ரமேஷ், புவனேஸ்வரி, அற்புதம், ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் ஜெயராமன், கணக்காளர் எஸ்.சதீஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைகளின் கீழ் பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT