திருவண்ணாமலை

மழை வேண்டி வருண பகவானுக்கு வழிபாடு

4th Jul 2019 09:35 AM

ADVERTISEMENT

செங்கம் அருகே மழை பெய்யவேண்டி கிராம மக்கள் வருண பகவானுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
 செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மழை பெய்யவேண்டி வருண பகாவனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதற்காக, கிராம மக்கள் ஒன்று கூடி மேளத்துடன் வீடு, வீடாகச் சென்று சிறு தானியங்களை சேகரித்தனர்.
 பின்னர் களி, கருவாடு சமைத்து வளையாம்பட்டு சாலையில் உள்ள செங்கம் ஏரியில் வருண பகவானுக்கு படையலிட்டு, பெண்கள் ஒப்பாரி வைத்து அழுகையுடன் மழை பெய்யவேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். பூஜை முடிந்த பிறகு சுவாமிக்கு படையலிட்ட களி, கருவாட்டு உணவை பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT