போளூர் மண்டல துணை வட்டாட்சியர் சு.முனிராசன் பணிநிறைவு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
வட்டாட்சியர் ஜெயவேல் தலைமை வகித்தார். ஆரணி சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ஜீவா வரவேற்றார்.
துணை ஆட்சியர்கள் (ஓய்வு) மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் தியாகராஜன், துணை ஆட்சியர் (நிலம்) கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் ஆனந்தகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.