திருவண்ணாமலை

நீர், நிலைகள் மீட்பு இயக்க ஆலோசனைக் கூட்டம்

2nd Jul 2019 09:20 AM

ADVERTISEMENT

செங்கத்தில் நீர், நிலைகள் மீட்பு இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட நீர், நிலைகள் குறித்து, நீர், நிலைகள் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 பக்கிரிபாளையம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வரத்து கால்வாய்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், செங்கம் அருகேயுள்ள மேல்பள்ளிப்பட்டு ஏரியின் கரைகளை சீரமைக்க வேண்டும், தொரப்பாடி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியை தூர்வாரவேண்டும், ஏரி, குளங்கள் உள்ள பகுதிகளில் நீர்நிலை மீட்பு இயக்கம் சார்பில் பனை மரங்கள் நடவேண்டும், செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க நீர், நிலைகள் மீட்பு இயக்கம் நடவடிக்கை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், நீர், நிலைகள் மீட்பு இயக்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT