திருவண்ணாமலை

கேளூர் மாட்டுச்சந்தை ரூ.15.33 லட்சத்துக்கு ஏலம்

2nd Jul 2019 09:18 AM

ADVERTISEMENT

போளூரை அடுத்த கேளூர் ஊராட்சியில் உள்ள தேப்பனந்தல் கிராம மாட்டுச்சந்தை குத்தகை ஏலம் ரூ.15.33 லட்சத்துக்கு திங்கள்கிழமை ஏலம் போனது.
 தேப்பனந்தல் கிராமத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறும்.
 இந்த மாட்டுச்சந்தை குத்தகை ஏலம் விடும் நிகழ்வு போளூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் கா.ஆனந்தன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதில் 40 குத்தகை ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். மாட்டுச்சந்தை குத்தகை ஏலம் ஜூலை 1 முதல் 2020 மார்ச் 31வரை என 9 மாத காலத்துக்கு ரூ.15 லட்சத்து 33 ஆயிரத்தில் ஏலம் எடுத்தனர்.
 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT