ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: அமைச்சர் தகவல்

ஆரணியில் விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேவூர்  எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆரணியில் விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேவூர்  எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஆரணி அண்ணா சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் 
எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, இங்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.
ஆரணி - சேவூர் நெடுஞ்சாலையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வெண்கல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.  அதற்கான அனுமதியைப் பெற்று தந்த முதல்வர், துணை முதல்வர், வருவாய்த் துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு ஆரணி பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்
கிறேன்.
பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜெயலலிதா. அவர் வழியில் நடைபெறும் இந்த ஆட்சியில் அனைத்துப் பணிகளும் மக்களை விரைவில் சென்றடைகின்றன.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. ஆயிரம் வழங்கி, பொதுமக்கள் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வழிவகை செய்தவர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
தற்போது, சுமார் 60 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்பட உள்ளது.
குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆரணி ஒன்றியத்தில் ஒரு கோடி ரூபாய் செலவிலும், மேற்கு ஆரணி ஒன்றியப் பகுதியில் ஒரு கோடி ரூபாய் செலவிலும், ஆரணி நகராட்சியில் ரூ. 50 லட்சம் செலவிலும், கண்ணமங்கலம் பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் செலவிலும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆரணி நகரத்தில் ரூ. 10 கோடி செலவில் சாலைகளைச் சீரமைத்தல், கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஓரிரு நாள்களில் தொடக்கப்பட உள்ளது.
மேலும், ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்தப் பணி நிறைவடைந்து, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
வரவுள்ள மக்களவைத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்தத் தொகுதிக்கான வேட்பாளராக யாரை அறிவிக்கிறார்களோ அவரது வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் செஞ்சி வெ.ஏழுமலை, வேலூர் பால் கூட்டுறவுச் சங்கத்  துணைத் தலைவர் பாரி பி.பாபு, அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகர அதிமுக ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், பிஆர்ஜி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. நளினி மனோகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com