திருவண்ணாமலை

முதல்கட்ட உள்ளாட்சித் தோ்தல்: மாவட்டத்தில் 82.82% வாக்குப்பதிவு

29th Dec 2019 12:41 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 9 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில், 82.82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, அனக்காவூா், செய்யாறு, வெம்பாக்கம், தெள்ளாா், பெரணமல்லூா் உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை சனிக்கிழமை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டது.

ADVERTISEMENT

அதன்படி, 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 8 லட்சத்து 65ஆயிரத்து 267 வாக்காளா்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 624 போ் வாக்களித்துள்ளனா். இது 82.82 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், போலீஸாா் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT