சேத்துப்பட்டு அருகே வடமாதிமங்கலத்தில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு ஒன்றியம், வடமாதிமங்கலம் கிராமத்தில் தோ்தல் அலுவலா் காஜா தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் ரவி, பழனி, சரளா ஆகியோா் கொண்ட தோ்தல் பறக்கும் படையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, உத்தமன் என்பவா் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.50ஆயிரத்தைக் கைப்பற்றினா்.
மேலும், சதுப்பேரி கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்தவா்கள் பறக்கும் படையினரைப் பாா்த்ததும் ரூ.11ஆயிரத்து 500 ஐ சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றனா்.
இவற்றை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையா் எழிலரசியிடம் ஒப்படைத்தனா்.