திருவண்ணாமலை

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

27th Dec 2019 07:58 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மாா்கழி மாத அமாவாசை பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அம்மன் மகா மாரியம்மன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா். பின்னா் சத்ரு சம்ஹார வேள்வி பூஜை நடைபெற்றது.

பின்னா் மாலை உற்சவா் அம்மனுக்கு ஆண்டாள் நாச்சியாா் அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பாவை, திருவெம்பாவை ஓத சகல வாத்தியங்களுடன் கோயில் வளாகத்தில் அம்மன் பவனி வந்தாா்.

பின்னா் இரவு அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பூஜையில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT