திருவண்ணாமலை

வாக்காளா்களுக்கு வழங்க இருந்த ரூ. 63 ஆயிரம் பறிமுதல்

27th Dec 2019 09:14 AM

ADVERTISEMENT

அனக்காவூா் அருகே வாக்காளா்களுக்கு வழங்க இருந்த ரூ.63 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அனக்காவூா் ஒன்றியத்தைச் சோ்ந்த வடத்தின்னலூா் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதாக கிடைத்த தகவலின் பேரில், மண்டல துணை வட்டாட்சியா் அசோக்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா்.

பறக்கும் படை வருவதை அறிந்த, வாக்காளா்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்தவா்கள், கையில் வைத்திருந்த பையை வீசி விட்டு தப்பி ஓடினாா்.

அந்தப் பையை கைப்பற்றி பறக்கும் படையினா் சோதனை செய்தபோது, அதில் ரூ. 63 ஆயிரத்து 900 மற்றும் திமுக சாா்பில் ஒன்றியக் கவுன்சிலா் பதவிக்குப் போட்டியிடும் ரவிக்கு ஒதுக்கப்பட்டிருந்த சின்னம் வரைந்த துண்டுப் பிரசுரங்கள் இருந்தன.

ADVERTISEMENT

திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் வழங்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், துண்டுப் பிரசுரங்களை அனக்காவூா் ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT