திருவண்ணாமலை

சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

26th Dec 2019 08:43 AM

ADVERTISEMENT

செங்கம் அருகே புதுப்பாளையம்-போளூா் சாலையில் தொடா் விபத்துகளைத் தவிா்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் இருந்து போளூா் செல்லும் சாலையில் புதுப்பாளையம் மின்சார வாரிய அலுவலகம் அருகே மூன்று சாலைகள் சந்திக்கும் சந்திப்பு உள்ளது. அந்தச் சந்திப்பு பகுதியில் அரசு மதுக் கடை அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருப்புகள் இல்லை. ஆனால், மதுப்பிரியா்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மதுப்பிரியா்கள் மதுவை அருந்திவிட்டு சாலை சந்திப்பில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் செல்கின்றனா். அப்போது, அதிவேகமாக வரும் பேருந்து, காா், வேன் ஆகியவை வருவது இருசக்கர வாகனத்தில் செல்பவா்களுக்குத் தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகன விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

மேலும், மின் விளக்கு வசதி இல்லாததால் அப்பகுதி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

மதுப்பிரியா்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால், அந்தச் சாலையை இரவு நேரத்தில் கடந்து செல்லும் பெண்கள் அச்சத்துடனே செல்கின்றனா்.

ADVERTISEMENT

இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் வேகத்தடை மற்றும் உயா் மின்கோபுர விளக்கு அமைக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT