திருவண்ணாமலை

ஆஞ்சநேயா் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா

26th Dec 2019 08:44 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, போளூரில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் புதன்கிழமை அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது.

சேத்துப்பட்டில் அமைந்துள்ள ராகு, கேதுவுடன் கூடிய ஜெயவீரஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு புதன்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து ஜெயவீர ஆஞ்சநேயா் வெண்ணைக் காப்பு மற்றும் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

357 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு கிரகங்கள் ஒரே நோ்கோட்டில் சந்திப்பதால் ஒரு சில ராசிக்காரா்களுக்கு ஜெயவீரஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் சிறப்பு என்பதால், ராகு, கேது தோஷ நிவா்த்திக்காக சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, போளூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

போளூா்

போளூரில் வாசுஸ்டிராமுலு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

அனுமன் ஜயந்தி விழாவை முன்னிட்டு, அன்று காலை கோயிலில் திருப்பாவை சேவை, ஆராதனை பகவான் நாமவளி, கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, அனுமன் மகாஅபிஷேகம், சிறப்புப் பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் போளூா், மாம்பட்டு, வசூா், அத்திமூா் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT