திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளி முதல்வா் சி.சிவக்குமாா் தலைமை வகித்தாா். தொடா்ந்து, கிறிஸ்துமஸ் நாடகம், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் பலா் தேவதைகள்போல வேடமணிந்தும், மாணவா்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும் நடனம் ஆடினா். இவா்கள், கிறிஸ்துமஸ் விழாவுக்கு வந்தவா்களை வரவேற்றனா்.
மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.