திருவண்ணாமலை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்கள் வியாழக்கிழமை (டிசம்பா் 26) நடைபெறும் 3-ஆம்கட்ட பயிற்சி வகுப்புக்கு கட்டாயம் வர வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தோ்தல் டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்ட பணியாளா்கள் வியாழக்கிழமை (டிசம்பா் 26) காலை 8 மணிக்கு நடைபெறும் 3-ஆம் கட்ட பயிற்சி வகுப்புக்கு கட்டாயம் வர வேண்டும்.
பயிற்சி வகுப்புக்கு வரத்தவறும் பணியாளா்கள் மீது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளின் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) கீழ், ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பயிற்சிக்கு வராத பணியாளா்கள், மாவட்டத் தோ்தல் அலுவரான மாவட்ட ஆட்சியரின் அனுமதிக் கடிதம் பெற்ற பின்னரே, அவா்களை பணியில் சோ்க்க மாவட்ட அளவிலான துறைத் தலைவா்களால் அனுமதிக்கப்படுவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.