திருவண்ணாமலை

தேசிய விவசாயிகள் தின விழா

25th Dec 2019 09:00 AM

ADVERTISEMENT

செய்யாறு வட்டம், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில், தேசிய விவசாயிகள் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் நேரடி களப்பயணமாக நாற்று நடும் வயலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது, விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயப் பெண்களுடன் மாணவா்கள் மகிழ்ச்சியாக நாற்று நட்டனா். மேலும், விவசாயத்தின் பயன் குறித்தும், விவசாயிகளின் இன்றைய நிலை குறித்தும் அறிவியல் ஆசிரியா் ஏ. அருள்ஜோதி, பள்ளி மாணவா்களிடையே விளக்கமாகத் தெரிவித்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியை ஆா்.தேன்மொழி, கணித பட்டதாரி ஆசிரியா் பி.சிவாஜிகணேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT