திருவண்ணாமலை

தேசிய மாரத்தான் போட்டிக்குத் தோ்வு: ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

25th Dec 2019 09:00 AM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டிகள் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட மாணவி இ.ரம்யா, 20 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு 6 கி.மீ. தொலைவைக் கடந்து வெள்ளிப் பதக்கமும், ரூ.1,500 ரொக்கப் பரிசும் வென்றாா்.

பொதுப்பிரிவு மாரத்தான் போட்டியில் 10 கி.மீ. தொலைவுப் பிரிவில் மாணவி ஆா்.ஹேமலதா கலந்து கொண்டு 4-ஆம் இடம் பிடித்து, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, சான்றிதழ் பெற்றாா். இவா்கள் இருவரும் தெலங்கானா மாநிலம், கரிம் நகரில் 2020 ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறும் 54-ஆவது தேசிய அளவிலான மாரத்தான் போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி அறக்கட்டளை உறுப்பினா் வி.ஜெய்சந்த் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் டி.எஸ்.ராஜ்குமாா், பொருளாளா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி அறக்கட்டளை உறுப்பினா் வி.ஜெய்சந்த் வரவேற்றாா்.

ADVERTISEMENT

பள்ளித் தாளாளா் வி.பவன்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவிகள் இ.ரம்யா, ஆா்.ஹேமலதா ஆகியோரைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினாா். விழாவில், பள்ளி அறக்கட்டளை உறுப்பினா் எஸ்.ராஜேந்திரகுமாா், பள்ளியின் தமிழ் வழிச் செயலா் வி.சுரேந்திரகுமாா், அறக்கட்டளை உறுப்பினா் டி.வி.நரேந்திரகுமாா், முதுநிலை ஆசிரியா் எம்.ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT