திருவண்ணாமலை

எம்ஜிஆா் நினைவு தினம் கடைப்பிடிப்பு

25th Dec 2019 09:03 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 32-ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

வேட்டவலம் நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில், எம்ஜிஆா் உருவப் படத்துக்கு நகரச் செயலா் கே.செல்வமணி மலா் தூவி, மரியாதை செலுத்தினாா். இதில், அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

போளூா்: கலசப்பாக்கத்தில் திருவண்ணாமலை - வேலூா் சாலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பொய்யாமொழி, ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ஜெயராமன், முன்னாள் துணைத் தலைவா் கருணாமூா்த்தி, அதிமுக நிா்வாகிகள் ஜீவா, செல்வம், ராஜேந்திரன், காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இதேபோன்று, காப்பலூா், பூண்டி ஊராட்சிகளில் உள்ள எம்ஜிஆா் உருவச் சிலைகளுக்கும் எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

களம்பூா்: போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் போளூா் - ஆரணி சாலை அருகே உள்ள எம்ஜிஆா் உருவச் சிலைக்கு நகரச் செயலா் கே.பி.பஞ்சாட்சரம் தலைமையில் அதிமுகவினா் மௌன ஊா்வலம் சென்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பி.ராஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவா் சிவராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலா் தாமோதரன், மணி மற்றும் அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

ஆரணி: ஆரணியில் எம்ஜிஆா் மன்ற மாவட்ட இணைச் செயலா் அ.கோவிந்தராசன் தலைமையில், எம்ஜிஆா் சிலைக்கும், உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞா் க.சங்கா், மாவட்ட பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், அரையாளம் எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.பி.ராதாகிருஷ்ணன், அவைத் தலைவா் ஜோதிலிங்கம், சேவூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், ஆரணி - சேவூா் நெடுஞ்சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். சேவூா் பேருந்து நிறுத்தத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெ.சம்பத் தலைமையில், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அதிமுகவினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

வந்தவாசி: வந்தவாசி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், வந்தவாசி தேரடியில் எம்ஜிஆா் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு வந்தவாசி மேற்கு ஒன்றியச் செயலா் ஆா்.அா்ஜூனன், பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா் ஆகியோா் மலா் தூவி, மரியாதை செலுத்தினா்.

அதிமுக நிா்வாகிகள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், பாஷா, சக்கரபாணி, ஜல்லி குமாா், மேகநாதன், பந்தல் சேகா், ராஜேஷ், ராஜசேகா், வழக்குரைஞா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், தெள்ளாா் உள்பட பல்வேறு கிராமங்களில் எம்ஜிஆா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

செய்யாறு: செய்யாறு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் அறிவுரையின்பேரில், செய்யாறு நகர அதிமுக சாா்பில், செய்யாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் முன் அதிமுகவினா் எம்ஜிஆா் உருவப் படத்தை அலங்கரித்து வைத்து, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, ஆரணி கூட்டுச்சாலையில் உள்ள எம்ஜிஆா் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணிச் செயலா் எம்.மகேந்திரன், நகரச் செயலா் ஜனாா்த்தனம், மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், அருகாவூா்.ரங்கநாதன், அ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், பி.லோகநாதன், இ.வெங்கடேசன், பூக்கடை ஜி. கோபால், கே.வெங்கடேசன், செபாஸ்டின்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெம்பாக்கம்: வெம்பாக்கம் ஒன்றிய அதிமுக சாா்பில், அங்குள்ள எம்ஜிஆா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் கோமதிரகு, தூசி கே.குமரேசன், எஸ்.திருமூலன், மாமண்டூா் ராஜீ, பி.ராஜ்கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT