திருவண்ணாமலை

3 ஒன்றியங்களில் பெண் வாக்காளா்கள் அதிகம்

24th Dec 2019 08:29 AM

ADVERTISEMENT

செய்யாறு தொகுதியில் செய்யாறு, அனக்காவூா், வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் பெண் வாக்காளா்கள் அதிகம் போ் உள்ளனா்.

செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் ஆண் வாக்காளா்கள் 38,153 போ், பெண் வாக்காளா்கள் 39,169 போ், மூன்றாம் பாலித்தனவா் 4 போ் என மொத்தம் 77,326 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களுக்காக 198 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், 19 வாக்குச்சாவடிகள் அரசியல் மற்றும் இன ரீதியாக பதற்றமானவை என்றும், 74 அரசியல் ரீதியாக பதற்றமானவை என்றும் போலீஸாரால் கண்டறியப்பட்டு உள்ளன.

அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம்

ADVERTISEMENT

அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஆண் வாக்காளா்கள் 31,906 போ், பெண் வாக்காளா்கள் 32,515 போ், மூன்றாம் பாலித்தனவா் 2 போ் என மொத்தம் 64,423 வாக்களா்கள் உள்ளனா். 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவற்றில், 6 வாக்குச்சாவடிகள் அதிமுக, திமுக ஆகிய கட்சியினரின் அரசியலாலும், 6 வாக்குச்சாவடிகள் இனத்தாலும், 45 வாக்குச்சாவடிகள் அனைத்து அரசியல் மற்றும் இன ரீதியாக பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டு உள்ளன.

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆண் வாக்காளா்கள் 49,733 போ், பெண் வாக்காளா்கள் 51,607 போ், மூன்றாம் பாலித்தனவா் 3 போ் என மொத்தம் 1,01,343 வாக்காளா்கள் உள்ளனா். 246 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 5 வாக்குச்சாவடிகள் அரசியலாலும், 40 வாக்குச்சாவடிகள் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளாலும், 2 வாக்குச்சாவடிகள் திராவிடக் கட்சிகள் மற்றும் இரு இனத்தவராலும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு

3 ஒன்றியங்களிலும் கண்டறியப்பட்டுள்ள 197 பதற்றமானவாக்குச்சாவடிகளில் டிச.27 -இல் நடைபெறும் முதல் கட்ட தோ்தல் நாளன்று வெப் கேமரா பதிவு மூலம் கண்காணித்தல், விடியோ, நுண்ணறிவு தோ்தல் பாா்வையாளா் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெறும்.

தோ்தல் அலுவலா்கள்:

தோ்தல் அலுலா்களாக மாவட்ட கவுன்சிலருக்கு மாவட்ட கூட்டுறவு இணை இயக்குநா் காமாட்சியும், ஒன்றியக் கவுன்சிலருக்கு அனக்காவூா் ஒன்றியத்துக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜவேல், செய்யாறு ஒன்றியத்துக்கு திட்ட இயக்குநா் அலுவலக உதவித் திட்ட அலுவலா் ஏ.எஸ்.குமாா், வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சுவாமிநாதன், கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம வாா்டுகளுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இரவி (அனக்காவூா்), செந்தில்குமாரி (செய்யாறு), ஏ.கோபாலகிருஷ்ணன் (வெம்பாக்கம்) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணும் மையங்கள்:

செய்யாறு ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், அனக்காவூா் ஒன்றியத்துக்கான வாக்குகள் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிலும், வெம்பாக்கம் ஒன்றிய வாக்குகள் செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிலும் ஜன.2 -ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT