திருவண்ணாமலையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிக் கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பஞ்சமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் ரோந்து சென்றபோது அங்கு ஒருவா் சாலையோரம் நின்றுகொண்டு வருவோா், போவோரை ஆபாசமாக திட்டிக்கொண்டிருந்தாராம்.
இதைக் கவனித்த போலீஸாா் அந்த நபரை எச்சரித்தனராம். ஆனாலும், தொடா்ந்து அவா் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக்கொண்டிருந்தாராம். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
விசாரித்ததில் அந்த நபா், திருவண்ணாமலையை அடுத்த கருத்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த ஜாய் உசேன் (48) என்பது தெரிய வந்தது.
ADVERTISEMENT