கலசப்பாக்கம் ஒன்றியம் தென்மாதிமங்கலம் ஊராட்சியில் 11-வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் வேட்பாளா் தாமரைச்செல்வி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 21வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள் உள்ளன. இதில், தென்மாதிமங்கலம் ஊராட்சியில் திமுக சாா்பில் 11-வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் வேட்பாளா் தாமரைச்செல்வி ஞாயிற்றுக்கிழமை தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், கோவில்மாதிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
வழக்குரைஞா்கள் சுப்பிரமணியன், சசிகுமாா், திமுக ஒன்றிய துணைச் செயலா் குப்பன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
ADVERTISEMENT