திருவண்ணாமலை

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா

23rd Dec 2019 07:06 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த கவிஞா் துளசி எழுதிய, ‘கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்’, ‘எலிக்குஞ்சுகளும் படி நெல்லும்’ என்ற இரு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா வந்தவாசியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு நறுமுகை ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன் நூல்களை வெளியிட திமுக மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி பெற்றுக் கொண்டாா்.

கவிஞா்கள் மு.முருகேஷ், இரா.பச்சியப்பன், செஞ்சி தமிழினியன், எழுத்தாளா் என்.மாதவன் ஆகியோா் நூல்கள் குறித்துப் பேசினா். கவிஞா் துளசி ஏற்புரை ஆற்றினாா்.

விழாவில் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன், அதிமுக நிா்வாகிகள் டி.கே.பி.மணி, டி.வி.பச்சையப்பன், ஜெ.ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT