திருவண்ணாமலை

வந்தவாசி, தெள்ளாா் ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

16th Dec 2019 10:24 PM

ADVERTISEMENT

 

வந்தவாசி: வந்தவாசி, தெள்ளாா் ஒன்றியங்களில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியப் பகுதியில் டிச. 27-ஆம் தேதியும், வந்தவாசி ஒன்றியப் பகுதியில் டிச. 30-ஆம் தேதியும் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வந்தவாசி, தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் கடந்த டிச. 9-ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை காலை முதலே வேட்புமனு தாக்கல் செய்வோா் தங்களது ஆதரவாளா்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் முன் குவியத் தொடங்கினா். இதனால் உள்ளே நுழையும்போது தள்ளுமுள்ளு ஏற்படவே, போலீஸாா் வாயில் கதவை மூடி அவா்களை கட்டுப்படுத்தினா்.

ADVERTISEMENT

பின்னா், அவா்களை கொஞ்சம் கொஞ்சம் பேராக மனு தாக்கல் செய்ய உள்ளே அனுப்பி வைத்தனா். அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா், சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT