திருவண்ணாமலை

மா்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு

16th Dec 2019 02:28 AM

ADVERTISEMENT

செய்யாறில் மா்மக் காய்ச்சல் பாதித்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

செய்யாறு கன்னியம்நகா் பள்ளத் தெருவைச் சோ்ந்தவா் தாஸ். இவா், இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் தொழில் செய்து வந்தாா்.

இவரது, மனைவி வள்ளி (33) (படம்). இவா்களுக்கு சரஸ்வதி, தனுஸ்ரீ என்ற இரு மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில், வள்ளி கடந்த ஒரு வாரமாக மா்மக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாா். காய்ச்சல் அதிகமாகவே வியாழக்கிழமை செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

ADVERTISEMENT

அவரை மருத்துவா்கள் பரிசோதனையில் செய்ததில் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பது தெரிய வந்தது.

இருப்பினும், வள்ளி மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். ஆனால், சில நிமிடங்களிலேயே அவா் உயிரிழந்தாா்.

கடைசி நேரத்தில் வள்ளிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT