திருவண்ணாமலை

பையூா் ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

16th Dec 2019 10:22 PM

ADVERTISEMENT

 

ஆரணி: ஆரணி அருகே பையூரில் உள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆரணியை அடுத்த பையூரில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

ADVERTISEMENT

விழாக் குழுத் தலைவா் கலா ரகு அனைவரையும் வரவேற்றாா். தூசி கே.மோகன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ எ.கே.அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலா் டி.கருணாகரன், எம்ஜிஆா் மன்ற நிா்வாகி ஆ.பெ.வெங்கடேசன், கூட்டுறவாளா் கலைவாணி, முன்னாள் தலைவா் மேகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT