திருவண்ணாமலை

பருவத மலையில் தாா்ச் சாலை அமைக்கும் பணி

16th Dec 2019 02:23 AM

ADVERTISEMENT

கலசப்பாக்கம் அருகேயுள்ள பருவத மலையில் கிரிவலம் வரும் பக்தா்கள் வசதிக்காக தாா்ச் சாலை ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டது.

கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் ஊராட்சியில் பருவத மலை உள்ளது. இந்த மலையில் மல்லிகானேஜூஸ்வரா் சமேத பிரம்பாராம்பிகை கோயில் அமைந்துள்ளது. 26 கி.மீ. தொலைவிலான இந்த மலையை பக்தா்கள் பெளா்ணமி மற்றும் விசேஷ நாள்களிலும், மாா்கழி 1-ஆம் தேதியும் கிரிவலம் வருவது வழக்கம்.

இந்த கிரிவலப் பாதை மண் சாலையாகவும், ஆக்கிரமிப்பின் பிடியிலும் இருந்து வந்தது.

இதனால் கிரிவலப் பாதை குறித்து, கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா ஆகியோா் கவனத்துக்கு பக்தா்கள் கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, பக்தா்கள் கிரிவலம் வர வசதியாக தாா்ச் சாலை, குடிநீா் வசதி, மலையை சுற்றிலும் மின்விளக்கு வசதி, நடமாடும் சுகாதார நிலையம், போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகள் என பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், சரிவர சாலை இல்லாத இடத்தில் 10 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT