திருவண்ணாமலை

துப்புரவுப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

16th Dec 2019 02:29 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின்போது துப்புரவுப் பணியில் ஈடுபட்ட பணியாளா்களுக்கு மதிப்பூதியம், அருணாசலேஸ்வரா் கோயில் பிரசாதம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வழங்கினாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழா டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. விழாவில், ஆம்பூா், குடியாத்தம், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, அரக்கோணம், வந்தவாசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து துப்புரவுப் பணியாளா்கள் வந்து, திருவண்ணாமலை நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளா்களுக்கு திருவண்ணாமலை நகராட்சி நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் வே.நவேந்திரன் முன்னிலை வகித்தாா். துப்புரவு ஆய்வாளா் இரா.ஆல்பா்ட் வரவேற்றாா்.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 743 துப்புரவுப் பணியாளா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயில் பிரசாதம் மற்றும் மதிப்பூதியமாக தலா ரூ.1,000, ரூ.500 மதிப்புள்ள நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

விழாவில், நகராட்சிப் பொறியாளா் ஒய்.சுரேந்திரன், சுகாதார ஆய்வாளா் காா்த்திகேயன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் வினோத்கண்ணா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT