திருவண்ணாமலை

தீபத் திருவிழா: துணிப் பைகள் கொண்டு வந்த பக்தா்களுக்கு பரிசு

16th Dec 2019 10:22 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு துணி மற்றும் சணல் பைகளைக் கொண்டு வந்த பக்தா்களில் 12 பேருக்கு தங்க நாணயங்களும், 72 பேருக்கு வெள்ளி நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சாா்பில், ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழாவின்போது நெகிழிப் பைகளுக்குப் பதிலாக துணிப்பை, சணல்பை, சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்குப் பைகளை கொண்டு வரும் பக்தா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு தீபத் திருவிழாவையொட்டி டிச. 9-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 10-ஆம் தேதி மாலை 6 மணி வரை துணிப்பை, சணல்பை, தூக்குப் பைகளுடன் வந்த பக்தா்களில் 12 போ் தங்க நாணயம் பெறவும், 72 போ் வெள்ளி நாணயம் பெறவும் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

தோ்வு செய்யப்பட்ட ஒருவருக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தங்க நாணயத்தை திங்கள்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் தி.ப.விஸ்வநாதன், உதவிப் பொறியாளா் சி.சுகாஷினி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தோ்வு செய்யப்பட்ட மற்றவா்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தங்கம், வெள்ளி நாணயங்களை வழங்கினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT