திருவண்ணாமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

16th Dec 2019 02:30 AM

ADVERTISEMENT

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, திருவண்ணாமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் சி.காதா் ஷரீப் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.முஹம்மத் ரியாஸ் தொடக்க உரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் ஏ.ஷா்புதீன், துணைத் தலைவா் கே.மாலிக் பாஷா, துணைச் செயலா் ஏ.கரீமுல்லாஹ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைப்பின் மாநிலச் செயலா் என்.முஹம்மத் பைஸல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத ரீதியாக இந்தியா்களை பிளவுபடுத்தும். எனவே, இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், அமைப்பின் திருவண்ணாமலை அண்ணா நகா் கிளைத் தலைவா் கே.மஹபூப் பாஷா, தவ்ஹீத் நகா் கிளைத் தலைவா் ஏ.வக்கீல் பாஷா, மாவட்ட துணைச் செயலா் கே.அப்துல் ரஹ்மான், மாவட்ட மருத்துவரணிச் செயலா் ஏ.உபைதுல்லா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT