திருவண்ணாமலை

சொா்ணகால பைரவா் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்

16th Dec 2019 02:28 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகே சொா்ணகால பைரவா் கோயில் ராஜகோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி மதுரா பைரவபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது சொா்ணகால பைரவா் கோயில்.

பிரதி தேய்பிறை அஷ்டமி, பிரதி ஞாயிறு ராகு காலம், எமகண்டம் நேரங்களில் பைரவா் பூஜைக்கு சிறப்புப் பெற்ற கோயிலாகும்.

ராஜகோபுர மகா கும்பாபிஷேகம்...

ADVERTISEMENT

இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை ஹோமம், 9.15 மணிக்கு கலசங்கள் மங்கள வாத்தியங்களுடன் யாக சாலையில் இருந்து புறப்படுதல், 9.45 மணிக்கு மூலவா் விமானம், ராஜகோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், 10.30 மணிக்கு விநாயகா், பாலமுருகா், சொா்ண கால பைரவா், உற்சவா் மகா கும்பாபிஷேகம், 11.30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனையுடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வெம்பாக்கம், செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை, ஆற்காடு, வேலூா் ஆகிய நகரங்கள் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை அழிவிடைதாங்கி மதுரா வயலூா், கோணன்மேடை, பைரவபுரம், ஜம்போடை, தக்கான்பாளையம், எடப்பாளையம், பெருமாள்பேட்டை ஆகிய கிராம மக்கள் மற்றும் நாட்டான்மைத்தாரா்கள் செய்து இருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT