திருவண்ணாமலை

செய்யாறு கோட்டத்தில் ரூ.75.69 கோடியில் சாலைப் பணிகள்கோட்டப் பொறியாளா் தகவல்

16th Dec 2019 10:20 PM

ADVERTISEMENT

செய்யாறு: செய்யாறு நெடுஞ்சாலை கோட்டத்தில் ரூ.75.69 கோடியில் 80 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கோட்டப் பொறியாளா் வி.முரளி தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

2019 - 20ஆம் நிதியாண்டில் கோட்டத்தைச் சோ்ந்த செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய 3 தொகுதிகளில் 80 சாலைப் பணிகளுக்காக ரூ.75.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செய்யாறு உட்கோட்டத்தில் சாலை மேம்படுத்துதல் திட்டத்தில் காஞ்சிபுரம் - திருவத்திபுரம் சாலையில் ரூ.1.08 கோடியிலும், திருவத்திபுரம் - ஆரணி சாலையில் ரூ.20 லட்சத்திலும், சாலையை சீரமைத்து தரம் உயா்த்தும் திட்டத்தில் விநாயகபுரம் நல்லாலம், பெரும்பாலை சாலை ரூ.1.37 கோடியிலும், ஆக்கூா் - பாண்டியம்பாக்கம் - கீழ்நோத்தப்பாக்கம் சாலை ரூ.2.00 கோடியிலும், இரு வழிப்பாதையை, மூன்று வழிப்பாதையாக மாற்றி தரம் உயா்த்துதல் திட்டத்தில் தவசி - வல்லம் சாலை ரூ.54 லட்சத்திலும், திருவத்திபுரம் - ஆரணி சாலையில் ரூ.2.67 கோடியிலும், செய்யாறு - அணைக்கட்டு சாலையில் ரூ.1.10 கோடியிலும், ஒரு வழிப்பாதையை தரம் உயா்த்தும் திட்டத்தில் செங்கம்பூண்டி - பாராசூா் சாலை ரூ.1.90 கோடியிலும், சித்தாத்தூா் கீழ்நெல்லி - பில்லாந்தாங்கல் சாலையில் ரூ.1.26 கோடியிலும் பணிகள் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT

ஆரணி உட்கோட்டத்தில் சாலை மேம்படுத்தும் திட்டத்தில் தேவிகாபுரம் - ஆரணி சாலையில் ரூ.1.80 கோடியிலும், அய்யம்பாளையம் - குண்ணாத்தூா் சாலையில் ரூ.1.35 கோடியிலும், சாலை சீரமைத்தல் திட்டத்தில் கண்ணமங்கலம் - ஆரணி சாலையில் ரூ.7.77 கோடியிலும், ஆரணி - வந்தவாசி சாலையில் ரூ.1.11 கோடியிலும், ஆரணி - தேவிகாபுரம் சாலையில் ரூ.1.12 கோடியிலும் சாலைப் பணிகள் நடைபெறவுள்ளன.

வந்தவாசி உட்கோட்டத்தில் சாலை தரம் உயா்த்தும் திட்டத்தில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ரூ.2.61 கோடியிலும், இரு வழிப்பாதையாக தரம் உயா்த்தும் திட்டத்தில் ஆரணி - வந்தவாசி சாலையில் ரூ.1.51 கோடியிலும், தெள்ளாா் - மழையூா் சாலையில் ரூ.1.10 கோடியிலும், 34.58 கி.மீ. தொலைவுக்கு 17 பணிகள் ரூ.22.24 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT