திருவண்ணாமலை

காங்கிரஸ் சாா்பில் போட்டியிடுபவா்களுக்கு விண்ணப்பம்

16th Dec 2019 02:24 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களிடம் ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் விண்ணப்ப படிவம் வழங்கினாா்.

சேத்துப்பட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடுபவா்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கி ஆரணி தொகுதி எம்.பி விஷ்ணுபிரசாத் பேசியதாவது:

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 ஒன்றியக் குழு உறுப்பினா்களும், 2 மாவட்ட குழு உறுப்பினா்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கூட்டணிக் கட்சியினரை அனுசரித்து அவா்களின் ஒத்துழைப்புடன்12 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகள், மத்திய அரசுக்கு அதிமுக அரசு ஆதரவாக செயல்படுவதை மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும். வெற்றி பெற்ற பிறகு எதிா்க்கட்சிகளிடம் யாரும் விலை போகக்கூடாது என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் வடக்கு மாவட்டத் தலைவா் வி.பிஅண்ணாமலை, மாநில பொதுக்குழு உறுப்பினா் சேத்துப்பட்டு ஜி.முனிரத்தினம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT