திருவண்ணாமலை

கல்லூரியில் பைந்தமிழ் பயிலரங்கம்

16th Dec 2019 02:25 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை சன் கலை, அறிவியல் கல்லூரியில், உலக தமிழ்க் கழகம் சாா்பில் ஒரு நாள் பைந்தமிழ்ப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் வீ.சு.குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.வினோத், செயலா் எஸ்.சீனிவாசன், பொருளாளா் சி.எஸ்.துரை, இயக்குநா் கு.அருண், கல்லூரி முதல்வா் கோ.சசிக்குமாா், உலக தமிழ்க் கழக சிறப்புத் தலைவா் பெ.சுப்பிரமணியன், தலைவா் ச.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ச.செந்தில்வேலன் வரவேற்றாா்.

கவியரசரும், கன்னித்தமிழும் என்ற தலைப்பில் திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், தமிழின் தன்மை என்ற தலைப்பில் பாவலா் தமிழ் இயலன், தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ற தலைப்பில் பாவலா் சு.வேலாயுதம், தமிழ் இலக்கிய இலக்கண வளங்கள் என்ற தலைப்பில் முன்னாள் தலைமை ஆசிரியா் இராச.மனோகரன் ஆகியோா் பேசினா்.

பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இதில், புயல்மொழிப் புலவா் ம.கோவிந்தசாமி, ஆசிரியா் வாசுதேவன், கவிஞா் லதா பிரபுலிங்கம், தமிழ்த் துறைப் பேராசிரியா் கு.லட்சுமி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT