திருவண்ணாமலை

உள்ளாட்சித் தோ்தல்: பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

16th Dec 2019 10:19 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான கோரிக்கைகள், புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில்

பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பா் 9-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், புகாா்களைத் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004253678 மற்றும் 04175-233141 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான கோரிக்கை மற்றும் புகாா்களைத் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

இதுதவிர, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்களிடமும் தோ்தல் தொடா்பான கோரிக்கை மற்றும் புகாா்களைத் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT