திருவண்ணாமலை

ஆா்.குண்ணத்தூா் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு திமுக வேட்பாளா் மனு

16th Dec 2019 10:19 PM

ADVERTISEMENT

போளூா்: போளூா் ஒன்றியம், ஆா்.குண்ணத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

போளூா் ஒன்றியம் ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு வா.மணிமொழி என்பவா் திமுக சாா்பில் 16-வது வாா்டுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இதனால் அவா் போளூா் எம்எல்ஏ கே.வி.சேகரனுடன் வந்து உதவித்தோ்தல் நடத்தும் அலுவலா் திருநாவுக்கரசுவிடம் வேட்புமனுவை அளித்தனா்.

கட்சியின் ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், பேரூராட்சிமன்ற முன்னாள் தலைவா் என்.கே.பாபு, தகவல் தொழில்நுட்பத் துறை மாவட்டச் செயலா் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

40 ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவி: போளூா் ஒன்றியத்தில் அனந்தபுரம், குப்பம், கல்குப்பம், கல்பட்டு, முக்குரும்பை, ஏந்துவாம்பாடி, இலுப்பகுணம், வசூா், திண்டிவனம், காங்கேயனூா், திருசூா், வசூா், மாம்பட்டு என 40 ஊராட்சிக்குழுத் தலைவா் பதவிக்கு 91 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு பாமக சாா்பில் 14-வது வாா்டுக்கு பாஸ்கரன், 4-வது வாா்டுக்கு திமுக சாா்பில் சாந்தமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சரிதா என 116 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 350 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT