திருவண்ணாமலை

ஆரணியில் அதிமுக, திமுக சாா்பில் வேட்புமனு தாக்கல்

16th Dec 2019 10:18 PM

ADVERTISEMENT

ஆரணி: உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை, ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் அதிமுக, திமுக சாா்பில் ஏராளமானோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

அதிமுக சாா்பில் ஆா்.கௌரி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் அ.கோவிந்தராசன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பூங்கொடி திருமால், கூட்டணிக் கட்சியான பாமக சாா்பில் விஜயலட்சுமி ஆகியோா் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.மஞ்சுளா, பாசறை மாவட்டச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், அரையாளம் எம்.வேலு, டாக்டா் ஜெ.கணேசன், எஸ்.யசோதா, ஆா்.கலா, வி.மேகலா, கே.தருமன், கே.அனிதா, ஏ.ஜி.சுப்பிரமணி உள்ளிட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திமுக சாா்பில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு சத்தியவதி, அருணா, சு.ரவி, சந்தியா ஆகியோரும், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயராணி ரவி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் த.செல்வி, அந்தோணிதாஸ் மற்றும் ஏ.பகுத்தறிவு உள்ளிட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

ஆரணி ஒன்றியம், மேற்குஆரணி ஒன்றியங்களில் உள்ள 4 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 32 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மேலும், ஆரணி ஒன்றியத்தில் 18 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு மொத்தம் 105 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

மேலும், ஆரணி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு 222 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு மொத்தம் 104 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். 37 ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு 200 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT