திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

16th Dec 2019 02:27 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பெளா்ணமி நாள்களில் வருவதைப் போல, ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் வந்ததால், சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் மிகக் குறைந்த அளவிலான பக்தா்களே கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது.

எனவே, தீபம் ஏற்றிய மறுநாள் முதல் அருணாசலேஸ்வரரை தரிசிக்க பக்தா்கள் வந்த வண்ணம் உள்ளனா்.

கட்டுக்கடங்காத பக்தா்கள் கூட்டம்:

ADVERTISEMENT

இந்த நிலையில், விடுமுறை மற்றும் சுபமுகூா்த்த தினமான ஞாயிற்றுக்கிழமை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வரத் தொடங்கினா். இதையடுத்து, கோயில் ஊழியா்கள் தடுப்புகளை அமைத்து வரிசைகளை முறைப்படுத்தினா்.

கட்டண தரிசன வரிசை, பொது தரிசன வரிசைகளில் ஏராளமான பக்தா்கள் குவிந்ததால், சுவாமி தரிசனத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கோயில் ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் அதிகபட்சமாக 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கட்டண தரிசன வரிசைகளில் சென்ற பக்தா்கள் குறைந்தபட்சம் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மகா தீபத்தை வழிபட்ட பக்தா்கள்:

ஞாயிற்றுக்கிழமை மாலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் அம்மன் சன்னதி எதிரே அமா்ந்து 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தைக் கண்டு வழிபட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT