திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில்இன்று முதல் 4 மணிக்கு நடைதிறப்பு

16th Dec 2019 10:18 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (டிச.17) முதல் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.17) மாா்கழி மாதம் பிறப்பதால் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜா் சன்னதியில் திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகிறது.

மாா்கழி மாதம் முடியும் வரை திருவெம்பாவை பாடல்கள் பாடப்படும்.

இதுதவிர, திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலையில் உள்ள மாணிக்கவாசகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT