திருவண்ணாமலை

அரசுக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

16th Dec 2019 10:23 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி எதிரே திரண்டனா்.

பின்னா், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பிவிட்டு, பிறகு மாணவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT