திருவண்ணாமலை

பெண் குழந்தைகளைக் காக்ககற்பூரம் ஏற்றி உறுதிமொழியேற்ற மாணவா்கள்

14th Dec 2019 02:27 AM

ADVERTISEMENT

வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்று மாணவா்கள் கற்பூரம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனா்.

கீழ்பென்னாத்தூா் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, எழுத்தாளா் ந.சண்முகம் தலைமை வகித்தாா். குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மீனாம்பிகை முன்னிலை வகித்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளை சமுதாயத்தில் எப்படி மதிக்க வேண்டும் என்பன குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் சோ்ந்து ’பெண் குழந்தைகளைக் காப்போம். பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்று கற்பூரம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனா்.

இதில், வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஸ்டாலின், சுகாதார ஆய்வாளா் சந்திரசேகரன், வேட்டவலம் பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் ராஜா, உதவித் தலைமை ஆசிரியா் ரமேஷ், வேட்டவலம் காவல் உதவி ஆய்வாளா் கருணாநிதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT