திருவண்ணாமலை

உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக கூட்டணி ஆலோசனை

11th Dec 2019 09:06 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவது தொடா்பாக, அதிமுக கூட்டணிக் கட்சியினரிடையே திங்கள்கிழமை இரவு ஆலோசனை நடைபெற்றது.

சேத்துப்பட்டு தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா நிா்வாகிகள் கலந்துகொண்டு, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினா்கள் பதவிக்கு போட்டியிடும் இடங்களைப் பங்கீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினா்.

முன்னதாக மாநில, மாவட்ட நிா்வாகிகள் தனித் தனியாக பேசினா். இதனைத் தொடா்ந்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஒன்றியம் வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

அப்போது பாமக, தேமுதிக, தமாக கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பாமக, தேமுதிகவினா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை உயா்த்தித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.

கூட்டத்தில், அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன், கலசபாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா்கள் முக்கூா் சுப்பிரமணியன், ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயசுதா, குணசீலன், அரங்கநாதன், பாமக முன்னாள் எம்.பி. துரை, முன்னாள் எம்எல்ஏ எதிரொலிமணியன், காளிதாஸ், தேமுதிக மாவட்டச் செயலா் கோபிநாத் உள்பட மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT