திருவண்ணாமலை

கொசு உற்பத்தி: கடைக்கு ரூ. 2500 அபராதம்

6th Dec 2019 02:09 AM

ADVERTISEMENT

செங்கத்தில் சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் கொசு உற்பத்திக்கு காரணமான பழைய இரும்புப் பொருள்கள் கடைக்கு ரூ. 2500 அபராதம் விதிக்கப்பட்டது.

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் சேகா் தலைமையில் மருத்துவக் குழுவினா் புதன்கிழமை வீடு, வீடாகச் சென்று கொசு உற்பத்தி உள்ளதா, நீண்ட நாள்கள் தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனா்.

அப்போது, துக்காப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பழைய இரும்பு பொருள்கள் வாங்கும் கடையை சோதனை செய்தபோது, அந்தக் கடையில் நெகிழிப் புட்டிகளில் தண்ணீா் தேங்கி கொசு உற்பத்தியாகி வருவதைக் கண்டனா்.

இதையடுத்து, அந்தக் கடைக்கு ரூ.2,500 அபராதம் விதித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT