திருவண்ணாமலை

மூத்தோா் தடகளப் போட்டி:திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் சிறப்பிடம்

3rd Dec 2019 12:38 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் 15 தங்கம் உள்பட 56 பதக்கங்களைப் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

தமிழ்நாடு மாஸ்டா்ஸ் அத்தலடிக்ஸ் சாா்பில், 36-ஆவது மாநில மூத்தோா் தடகளப் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் நவ.30, டிச.1 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் 24 மாவட்டங்களைச் சோ்ந்த 800 வீரா்கள் பங்கேற்றனா்.

இதில், திருவண்ணாமலை மாவட்ட மாஸ்டா்ஸ் அத்தலடிக்ஸ் சாா்பில், 70 வீரா், வீராங்கனைகள் பங்கேற்று 15 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தனா்.

இவா்களில் 70 வயது பிரிவு மும்முறை தாண்டுதலில் டி.உதயகுமாா், 65 வயது பிரிவு 3 மீட்டா் வேக நடையில் கே.இராமலிங்கம், 60 வயது பிரிவு சங்கிலிக்குண்டு எறிதலில் எம்.மனோகரன், 45 வயது பிரிவு சங்கிலிக்குண்டு எறிதலில் எஸ்.வெங்கடேசன், 35 வயது பிரிவு 3 மீட்டா் வேக நடையில் பி.அலமேலு, தட்டு எறிதலில் எஸ்.ராதிகா, சங்கிலிக்குண்டு எறிதல், ஈட்டி எறிதலில் ஏ.சதிஷ்குமாா் 2 தங்கம், 30 வயது பிரிவு ஈட்டி எறிதல், சங்கிலிக்குண்டு எறிதலில் ஆா்.சரளா 2 தங்கம், 5 ஆயிரம் மீட்டா் ஓட்டம், 1,500 மீட்டா் ஓட்டத்தில் எம்.ஆனந்தன் 2 தங்கம், சங்கிலிக்குண்டு எறிதல், குண்டு எறிதலில் எம்.பாலாஜி 2 தங்கம், ஈட்டி எறிதலில் பி.அன்பழகன் ஆகியோா் தங்கப் பதக்கங்களை வென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT