வேட்டவலம் வள்ளலார் சபையில் வள்ளலார் விழாவையொட்டி, சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு, பாவரசு கண்ணன் தலைமை வகித்தார். புலவர் கோவிந்தசாமி, பாவலர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளலார் சபை நிறுவனர் சுப்பிரமணிய பாரதியார் வரவேற்றார்.
திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர்
ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்குறளே திருஅருட்பா என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து, வள்ளலாரும் வாரியாரும் என்ற தலைப்பில் ஞானப்பிரகாசம், தெய்வமணிமாலை என்ற தலைப்பில் பாவலர் கோவிந்தராஜன், கண்ணதாசன் என்ற தலைப்பில் தேவிகாராணி, வாரியார் என்ற தலைப்பில் தங்க.விசுவநாதன், வாலியின் திரைப்படப் பாடல்கள் என்ற தலைப்பில் கவிஞர் லதா பிரபுலிங்கம் ஆகியோர் பேசினர்.
முன்னதாக, புருஷோத்தமன் குழுவினரால் அருட்பா இசையும், மாணவிகளின் நடனம், பழனிவேல் குழுவின் நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், வள்ளலார் சபை செயலாளர் பச்சையம்மாள் மற்றும் சபை நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.