திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், திருவண்ணாமலை மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் "ஃபிட் இந்தியா' என்ற அமைப்பின் தொடக்க விழா மற்றும் தேசிய விளையாட்டு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். பேராசிரியர் தங்கராஜ் வரவேற்றார். நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் அ.இங்கர்சால் "ஃபிட் இந்தியா' என்ற அமைப்பு குறித்து விளக்கினார். நேரு இளையோர் மைய தேசிய இளைஞர் தன்னார்வலர் தேர்வுக்குழு உறுப்பினர் ஏகாம்பரம், திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் உடல்கல்வி இயக்குனர் கவுரி, இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் குபேந்திரன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் முன்னிலையில் "ஃபிட் இந்தியா' உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. யோகா ஆசிரியர் ஜெய்சங்கர், தேசிய இளையோர் தன்னார்வலர் மோகனா மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஃபிட் இந்தியா உறுதிமொழியேற்றனர்.