திருவண்ணாமலை

முன்னாள் முதல்வருக்கு மரியாதை

28th Aug 2019 08:04 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட ரெட்டி நல சங்கம் சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் 49-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 
திருவண்ணாமலை, காந்தி சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் உருவப்படத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.டி.தனகோட்டி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். 
நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.வீரமணி, திருமண மண்டப உரிமையாளர் எஸ்.கோவிந்தசாமி, எஸ்.கே.வி. பள்ளித் தலைவர் எஸ்.மண்ணுலிங்கம், ஆடிட்டர் பிரபாகரன், தொழிலதிபர் பழனிவேல், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டி.கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT