திருவண்ணாமலை

கூடைப்பந்து, கபடிப் போட்டிகளில் சிறப்பிடம்: பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

28th Aug 2019 08:05 AM

ADVERTISEMENT

வட்ட அளவிலான கூடைப்பந்து, கபடிப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலையில் வட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து, கபடிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 
கூடைப்பந்துப் போட்டியில் திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதுக்கு உள்பட்டோர், 17வயதுக்கு உள்பட்டோர், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான 3 பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்ற
னர்.
கபடிப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். 
இவ்விரு போட்டிகளிலும் வென்ற மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. 
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் வி.பவன்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வுபெற்ற பொது மேலாளர் கே.புகழேந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கபடி, கூடைப்பந்து போட்டிகளில் வென்ற மாணவிகளைப் பாராட்டி பரிசு வழங்கினார் . 
விழாவில், பள்ளிச் செயலர் டி.எஸ்.ராஜ்குமார், பொருளாளர் டி.வசந்த்குமார், ஆங்கில வழிச் செயலர் டி.ஸ்ரீஹன்ஸ்குமார், தமிழ் வழிச் செயலர் வி.சுரேந்திரகுமார், பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.ஜெய்சந்த், எஸ்.ராஜ்குமார், டி.வி.சுதர்சன், பள்ளியின் உடல்கல்வி ஆசிரியர் எம்.ரமேஷ் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT