வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத கோதண்டராமர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை சுவாமிக்கு திருமஞ்சனம், சாற்று மறை வைபவம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர், மாலை கண்ணன் கழிலிணை என்ற தலைப்பில் ஆர்.சீனிவாச பெருமாள் பக்திச் சொற்பொழிவு ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து, சொற்பொழிவாளர் ஆனந்தன் தலைமையில் பஜனை நடைபெற்றது. விழாவில் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கர்ய அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.