திருவண்ணாமலை

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா

23rd Aug 2019 07:36 AM

ADVERTISEMENT

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். என்.சுரேஷ், ஆர்.நளினா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தெள்ளாரு இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர் க.பூபாலன் வரவேற்றார்.
வழூர் ஊராட்சிச் செயலர் எம்.பி.வெங்கடேசன் சிறப்புரையாற்றி, கிருஷ்ணர், ராதை வேடமிட்டு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், இசை நிகழ்ச்சி நடைபெற்றது.   விழாவில் ம.சுரேஷ்பாபு, செல்வராஜ், கு.சதானந்தன், சீ.கேசவராஜ், எ.ராஜ்குமார் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT